2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கொழுந்து கொய்யும் ஜப்பானிய மாணவிகள்...

Kogilavani   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

ஜப்பான் நாட்டின் உல்லாசப் பிரயாணிகள், இலங்கைக்கு அதிகமாக வருகை தருவதாக சுற்றுலா அமைச்சு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவைச் சேர்ந்த ஐவர், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள், பல்கலைகழகத்தின் பாடநெறிகளில் ஒன்றான தேயிலைக் கொழுந்து கொய்தல் தொடர்பான பாடத்திட்டத்துக்கென, மலையகத்தின் பத்தனை, கெலிவத்தை தோட்டத்தில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இலங்கைக்கான சர்வோதய அமைப்பின் ஊடாக இவர்கள் இப்பாட நெறிகளை, ஆராய்ச்சியின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்றைய நிலையில் கொழுந்து கொய்யும் தொழிலில் எவ்வாறு ஈடுப்படுகின்றனர் என்பது பற்றியது  மட்டுமன்றி, அவர்களின் வாழ்க்கை நிலையையும் இவர்கள் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X