2025 மே 22, வியாழக்கிழமை

சம்பிரதாயபூர்வ அறிவிப்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல மா பெரஹெர, நேற்று மாலை சம்பிரதாயபூர்வமாக நிறைவுசெய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் பத்திரம், பாரம்பரியமான முறையில் தலதாமாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேலவால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து,  இன்று மாலை கையளிக்கப்பட்டது.

ஊர்வலமாக ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத்தந்த தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல உள்ளிட்ட ஏனைய விகாரைகளின் நிலமேக்கள், ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியால் வரவேற்கப்பட்டனர்.

அதன்பின்னர், தியவடன நிலமேயால் பாரம்பரிய முறையில் நிறைவுப் பத்திரம் ஜனாதிபதி கையளிக்கப்பட்டது.

பெரஹெரவில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு பாரம்பரியமாக வழங்கப்படும் பரிசில்களும், சான்றிதழ்களும் இதன்போது ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

ஶ்ரீ தலதா மாளிகையின் “சிந்து” யானைக்குட்டிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பழங்களையும் வழங்கி வைத்தார்.  அதன்பின்னர் பாரம்பரியமுறைப்படி எடுக்கப்படும் குழுப்புகைப்படத்துக்கும் ஜனாதிபதி மற்றும் நிலமேக்கள் தோன்றினர்.

நான்கு மகா விகாரைகள் மற்றும் ஏனைய விகாரைகளைப் பேணிச்செல்வதன் பொருட்டும் இதன்போது ஜனாதிபதி பரிசில்கள் வழங்கப்பட்டன.

“சுற்றாடல் புனிதமானது தலதா மாளிகை கலாசாரம்” எனும் நூலும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவால் ஜனாதிபதி கையளிக்கப்பட்டது.

மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, அமைச்சர்களான லக்‌ஷ்மன் கிரியெல்ல, எஸ்.பி.திசாநாயக்க, பிரதியமைச்சர் அனுராத ஜயரத்ன, மாகாண அமைச்சர்கள் திலின பண்டார தென்னக்கோன், பந்துல யாலேகம, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ மற்றும் கண்டி மாவட்ட அரச அதிபர் எச்.எம்.ஹிட்டிசேக்கர உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .