2025 ஜூலை 23, புதன்கிழமை

சர்வமத வழிபாடு…

Editorial   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து இனத்தவர்களும் இணைந்து நாட்டுக்கு நிரந்தர சமாதானமும்  இன ஒற்றுமையும் வலுப்பட  வேண்டுமெனக் கோரி, திருகோணமலை மாவட்ட சர்வமதக்குழுவினர், தீபம் ஏற்றி, சர்வமத வழிபாட்டில் நேற்று (28)  ஈடுபட்டனர்.

மெழுகுவர்த்திகளை ஏந்நியவாறு  சர்வமத தலைவர்கள் உட்பட அனைத்து இனங்களையும் சேர்ந்த சர்வமத அங்கத்தவர்களும், “நாம் நாட்டுக்கு சமாதானத்தை  ஏற்படுத்துவதற்கு பூரண உத்துழைப்பு வழங்குவோம்”, “நாமும் ஒற்றுமையாக இருப்போம்” எனக்கூறி, மெழுகுவர்திகளை ஏந்தியவாறு சத்திரயப்பிரமாணத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் ரசிகா சதுராணி மற்றும் எம்.ஏ.நஸ்ரின் மற்றும் சமூக ஆய்வாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .