2025 மே 22, வியாழக்கிழமை

சாரதி படுகாயம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டியொன்று, நேற்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

வலையிறவு - வவுணதீவு பிரதான வீதியூடாக வவுணதீவு பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த முச்சக்கரவண்டியே, விமானப்படை வீதி வளைவில் வேகமாகத் திரும்புகையில் குடைசாய்ந்துள்ளது.

வீதியால் சென்றவர்களால், முச்சக்கரவண்டிச் சாரதி மீட்கப்பட்டு, உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளாரெனவும் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .