2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறைச்சாலையில்…

Editorial   / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்தனர்.

மட்டக்களப்புக்கு இன்று (15) விஜயம் மேற்கொண்டுள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய பிரதி அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொசான் ரணசிங்க, நிமால் லங்கஸா ஆகியோரே, சிறைச்சாலைக்குச் சென்று, முன்னாள் முதலமைச்சரை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனும் இணைந்திருந்தார்.

(படங்கள்: வா.கிருஸ்ணா)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X