2025 மே 17, சனிக்கிழமை

சிறைச்சாலை வான் விபத்தில் அதிகாரி பலி (படங்கள்)

Editorial   / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியா, திகம்பதன பிரதேசத்தில் சிறைச்சாலை வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன்,  மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வழக்கு நடவடிக்கைக்காக சிறைக்கைதியை, பல்லகெல சிறைச்சாலையில் இருந்து ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற போது இன்று (18) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வீதியை விட்டு விலகிய குறித்த வான், அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன்,  காயமடைந்த சிறைக்கைதி மற்றும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .