2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சீஷெல்ஸ் தேசிய வைத்தியசாலையை ஜனாதிபதி பார்வையிட்டார்

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீஷெல்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் நோக்கில், சீஷெல்ஸ் நாட்டுக்கு இரண்டு நாள்   விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன, இன்று (08) பிற்பகல் சீஷெல்ஸ் தேசிய மருத்துவமனையை பார்வையிடச் சென்றார்.

சீஷெல்ஸ் நாட்டின் சுகாதார துறைக்கு இலங்கையால் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவ்விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கண்டறிந்தார்.

சீஷெல்ஸ் தேசிய வைத்தியசாலைக்கு, வைத்திய உபகரணங்களையும் மருந்துப்பொருட்களையும்  ஜனாதிபதி இதன்போது அன்பளிப்பு செய்தார்.

இதனிடையே Lanka Hospitals வைத்தியசாலையின் சீஷேல்ஸ் நாட்டுக்கான புதிய கிளை ஜனாதிபதியால் இன்று   திறந்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X