2025 மே 21, புதன்கிழமை

சுகாதார துறையினருக்கு விருதுகள்...

எஸ். பாக்கியநாதன்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன் 

கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2015 – 2016  ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சுகாதாரத் திணைக்களங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிறந்த முறையில் சேயையாற்றிய வைத்தியதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களைக்  கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கே. முருகானந்தன் தலைமையில்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணியின் பிரதான மண்டபத்தில் நேற்று (16) மாலை நடைபெற்றது.

கிழக்குமாகாணத்தில் உள்ள சுகாதார திணைக்களங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற சுமார் 5,500க்கும் மேற்பட்டவர்களில் சிறந்த  சேவைகளை வழங்கி அர்ப்பணிப்புடன்  தமது கடமைகளை  புரிந்த உத்தியோகத்தர்கள்  மற்றும் ஊழியர்களில் தெரிவு செய்யப்பட்ட 186 பேருக்கு, கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தால் பாராட்டி கௌரவித்து, இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்தார். (படப்பிடிப்பு: ரீ.எல். ஜவ்பர்கான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .