2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சென்னையில் ’பயங்கரவாதி’...

Freelancer   / 2023 பெப்ரவரி 17 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய “பயங்கரவாதி” நாவல் உரையாடல் நிகழ்வு, டிஸ்கவரி புக் பேலஸ் ஏற்பாட்டில், நடிகர் நாசர் தலைமையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

டிஸ்கவரி புக் பேலஸின் பிரபஞ்சன் அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் ஓவியர் மருது, இயக்குநர் கவிதா பாரதி, கவிஞர் மண்குதிரை, ஈழ எழுத்தாளர் தமிழ்நதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

நிகழ்வில் உரையாற்றிய நாசர், “பயங்கரவாதி நாவல் போன்ற இலக்கியம் வழியாகவே தமிழ்நாடு, ஈழத்தை அறிந்தும் உணர்ந்தும் கொள்ள வேண்டும் ” என்று தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய ஓவியர் மருது, ஈழப் போராளிகளுடன் இருந்த கலை, இலக்கிய உறவு குறித்தும் தீபச்செல்வனின் நடுகல் நாவலில் வரும் வெள்ளையன் என்ற அண்ணாவை தனது கைகளால் வரைந்த நிகழ்வையும் உணர்வு ததும்ப நினைவுகூர்ந்தார்.

இறுதிப் போரில் யாழ். பல்கலை கழக மாணவர்கள் செய்த அறவழிப் போராட்டத்தை நுணுக்கமாக பயங்கரவாதி நாவல் பதிவு செய்துள்ளதாகவும் ஆழமும் கனியும் கொண்ட உரையை இந்துப் பத்திரிக்கையில் பணி புரியும் கவிஞர் மண்குதிரை நிகழ்த்தினார்.

பயங்கரவாதி நாவலின் முக்கிய பக்கங்களை நிகழ்வில் படித்ததுடன் கண்ணீருடன் உணர்வுபூர்வமான தொகுப்பையும் உரையையும் கவிஞரும் இயக்குனருமான கவிதா பாரதி வழங்கினார்.

நிகழ்வில் உரையாற்றிய கவிஞர் தமிழ்நதி, பல்வேறு அச்சுறுத்தல்களை தாண்டி, ஈழ மண்ணில் இருந்து இயங்கும் தீபச்செல்வனின் மிக முக்கியமான நாவல் “பயங்கரவாதி” என்றும் யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிலையை பயங்கரவாதி பதிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

நிகழ்வில் ஏற்புரை ஆற்றிய எழுத்தாளர் தீபச்செல்வன், இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட அச்சுறுத்தல்களை நினைவு படுத்தினார். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X