R.Tharaniya / 2025 ஜூன் 12 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) புதன்கிழமை (11) அன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
பேர்லினின் பெல்வீவ் மாளிகைக்கு (Bellevue Palace) வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் முப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.
உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வின் பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க் வோல்டர் ஸ்டெய்ன்மையருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலாக் கைத்தொழில் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.





23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025