Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 05 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்நிலையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச விசாரணை கோரி, புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஓர் அங்கமாக, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், லண்டனில் இருந்து ஜெனிவா வரை சைக்கிளில் பயணிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த 2ஆம் திகதி பிரித்தானியா பிரதமர் இல்லத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சைக்கிள் போராட்டம், ஐரோப்பிய நாடுகள் ஊடாக, எதிர்வரும் 20ஆம் திகதி ஜெனிவாவை சென்றடையவுள்ளது.
இந்தப் பயணத்தின் 2ஆவது நாள் போராட்டம், நெதர்லாந்து தமிழ் பேரவையின் ஏற்பாட்டில், நெதர்லாந்தின் டென்ஹாக் நகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னால் நேற்று முன்தினம் (03) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டவர்கள், சர்வதேச விசாரணை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி கோஷமிட்டனர்.
இதேவேளை, மனித உரிமை மற்றும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago