Editorial / 2017 ஜூன் 10 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்,எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
கனரக வாகனமொன்று வீதியில், தாழிறங்கியுள்ளதால் தலவாக்கலை-டயகம பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை பொலிஸார் பிரிவிற்குட்பட்ட நாகசேனை 3ஆம் கட்டை பகுதியில் இன்று காலை 8 மணியளவில், குறித்த வாகனம் தாழிறங்கியுள்ளது. அந்த வாகனத்தில், 28 ஆயிரம் மெற்றிக்டொன் புல் இருந்துள்ளது.
டயகம பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பு பண்ணைக்கு புல் ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு தாழிறங்கியுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட வீதியை பயன்படுத்த வேண்டிய சாரதிகள், தேயிலை ஆராய்ச்சி நிலைய வீதி அல்லது நானுஓயா மெரேயா வீதி ஆகியவற்றை பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குறித்த வானத்திலுள்ள புல் இறக்கப்படுவதாகவும், வாகனத்தை அப்புறப்படுத்தியதன் பின்னர், போக்குவரத்து வழமைக்கு திரும்பும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025