Freelancer / 2023 மே 18 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாண
ராமு தனராஜா
டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு முறைமை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஊவா மாகாணத்தை டெங்கு அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.





மூதூர்
எப்.முபாரக்
அதிகரித்துவரும் டெங்கு தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கான செயற்திட்டங்களை மூதூர் சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட
பகுதிகளில் முன்னெடுப்பது சம்பந்தமான கலந்துறையாடல் மூதூர் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.





அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .