Kogilavani / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}




சிவாணிஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் மூலம், டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில், நேற்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சப்ரகமுவ மாகாணத்தில், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தீவிரமாகப் பரவி வரும் டெங்கு நோயை முற்றாக ஒழிப்பதற்கு, சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கென, விசேட வேலைத் திட்டத்தையும் சப்ரகமுவ மாகாண சபை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள 56 நகரங்கள் மற்றும் உப நகரங்களில், டெங்கொழிப்பு சிரமதானம், நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஊவா மாகாண அமைச்சர் மஹிபால ஹேரத் கலந்துகொண்டு, டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
சிரமதானப் பணியில், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட செயலகம், சப்ரகமுவ மாகாண உள்ளுராட்சி நிறுவனங்கள், மாகாண வீதி அபிவித்தி அதிகாரசபை, மாகாண சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொலிஸார் மற்றும் இராணுத்தினர், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அரச திணைக்களங்கள் என்பன, முழுமையான ஒத்துழைப்பை வழங்கின.
டெங்குத் தொற்றுக் காரணமாக, கேகாலை மாவட்டத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6,779 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில், டெங்கு நோய் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதோடு 7, 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025