Niroshini / 2016 ஜூலை 23 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளை, பண்டாரவளை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் டீசல் பவுஸரொன்று, நேற்று வெள்ளிக்கிழமை(22) முற்பகல் புரண்டு விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர், தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்து கொண்டிருந்த டீசல் பவுஸரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வண்டியில் உள்ள, டீசலை அகற்றும் நடவடிக்கைகளை பொலிஸாரும், விமானப்படையினர் முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். (எஸ்.கணேசன்)

44 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
6 hours ago