Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா, வா.கிருஸ்ணா
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திட்டமிட்டபடி, இன்று (03) காலை கொட்டும் மழைக்கு மத்தியில் ஆரம்பமானது.
பொத்துவில் தொடக்கம் இடையிடையே அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் தடைகள் இருந்தன. அத்தனை தடைகளைத் தாண்டி இப்பேரணி நடைபெற்று வருகிறது.
பொத்துவில் தொடக்கம் திருக்கோவில் வரையான பிரதேசத்தில் கன மழை பெய்தபொழுதிலும் அனைவரும் நனைந்த வண்ணம் பேரணியில் பங்கேற்றனர்.
த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.சிறிநேசன், சி.லோகேஸ்வரன், சிவில் தலைவர்கள் மற்றும் சமயத் தவைர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
8 hours ago
29 Apr 2025