2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

தந்தையின் வழியில் புதல்வி...

Kogilavani   / 2017 ஜனவரி 26 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் முன்னணின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் புதல்வியான செல்வி அனுஷா தர்ஷினி, கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். எனவே, அவரை கட்சியின் உயர்பீடத்துக்கு உத்தியோகப்பூர்வமாக வரழைக்கும் நிகழ்வும் நியமன அங்கத்துவப்படிவம் வழங்கும் நிகழ்வும் இன்று,  இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் பத்தரமுல்லையிலுள்ள அபேகம ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் லோரன்ஸ் மற்றும் முன்னணியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் செல்வி அனுஸா தர்ஷினியை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். (படங்கள் பா.திருஞானம், டி.ஷங்கீதன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .