Editorial / 2022 ஜூன் 17 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய தமிழ்நாட்டின் நிவாரண பொருட்களின் ஒரு தொகுதி நுவரெலியா கொத்மலை பகுதியில் 34,012 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்திய தமிழ் நாட்டு அரசாங்கத்தின் மூலமாக இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண பொருட்களின் ஒரு தொகுதி நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச மக்களுக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
கண்டி இந்திய உதவி தூதரகத்தின் உதவித் தூதுவர் டாக்டர்.எஸ்.அதிரா கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.இதன்போது நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட கொத்மலை பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிவாரண பொருட்களில் 10 கிலோ கிராம் அரிசியும் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், ஜந்து வயதிற்கு குறைந்த பிள்ளைகளுக்கான பால்மா ஆகிய இருந்தன. ( டி.ஷங்கீதன்)






9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026