Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 30 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.விஜயவாசகன், எஸ்.அரசரட்ணம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் பூதவுடல், அவரது பிறந்த இடமான, தென்மராட்சியின் சாவகச்சேரி பகுதிக்கு இன்று காலை எடுத்துவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதலில், அவர் பயின்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பூதவுடல் வைக்கப்பட்டு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்களால் புதவுடல் பொறுப்பேற்கப்பட்டு, மேலைத்தேச இசை மரியாதையுடன் சாவகச்சேரி பஸ் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இவ்அஞ்சலி நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், ம.சுமந்திரன், வடமாகாணசபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், சி.அகில்தாஸ், தென்மராட்சிப் பிரதேச தமிழரசுக் கட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சர்வா, சாவகச்சேரி நகராட்சிமன்றம் மற்றும் பிரதேசசபை முன்னாள் உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
11 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
44 minute ago