Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2021 மே 15 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அச்சுவேலி நகரில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது இராணுவத்தினரால் இன்று (15) காலை முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்
யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலில் இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவத்தின் 521 ஆவது பிரிகேட் படைப்பிரிவினரால் அச்சுவேலி நகரப்பகுதி,சந்தை நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது
யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் இராணுவத்தினரால் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது (என்.ராஜ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago