Princiya Dixci / 2016 ஜனவரி 15 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாலி உயர்பாதுகாப்பு வலய பகுதியிலுள்ள கண்ணார் வயல் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க கலந்து கொண்டார்.
தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கபட்ட நிலையில் பொங்கல் வழிபாடுகள் மேற்படி ஆலயத்தில் இடம்பெறும் என்றும் நிகழ்வுகள் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் என்றும் இந்நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கபட்டிருந்தது.
மேற்படி ஆலயத்திற்கு மக்கள் வழமைபோன்று பதிவுகளின் பின்னர் அனுமதிக்கபட்டனர். இந்நிலையில் குறித்த ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் வழிபாட்டில் பிரதமர் மட்டும் கலந்துகொண்டார்.
இந்த வழிபாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)
13 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
2 hours ago