2025 ஜூலை 31, வியாழக்கிழமை

தொடர்ந்தும் போராட்டம்

Princiya Dixci   / 2017 மார்ச் 02 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பாக மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம், 4ஆவது நாளாக, மழைக்கு மத்தியிலும் இன்றும் இடம்பெற்றது.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி, கடந்த திங்கட்கிழமை (27) முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கறுப்பு கொடி கட்டி, மாவட்டச் செயலகத்தின் முன் உணவு சமைத்து உண்டு, தொடர்போராட்டத்தில்  இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமது போராட்டத்துக்கு, உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். (படப்பிடிப்பு: எஸ்.நிதர்ஸன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .