2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தென் கிழக்குக்கான மாநாடு

Niroshini   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

உலக சுகாதார அமைப்பின் 69ஆவது தென் கிழக்குக்கான மாநாடு, இன்று திங்கட்கிழமை, கொழும்பு தாமரைத் தடாக  கூட்ட மண்டபத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் ஆரம்பமானது.

11 நாடுகளின் உயரதிகாரிகள் கலந்துகொண்ட இம்மாநாட்டுக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இம்மாட்டின் போ,து சுகாதாரத்துறை புரட்சி பற்றிய கருத்துப் பரிமாற்றங்களும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டு பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் வெளிநாட்டு உயர் அதிகாரிகளின் விசேட உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, ரவூப் ஹக்கீம், நவீன் திஸ்ஸநாயக்க பிரதியமைச்சர் பைசால் காசீம் மற்றும் ஏனைய அமைச்சர்கள்  மாகாண முதலமைச்சர்கள், மாகாண சுகாதர அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்மாநாடு இன்று (5) தொடக்கம் எதிர்வரும் 09ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X