2025 ஜூலை 30, புதன்கிழமை

நல்லூர் ​கொடியேற்றம்...

R.Tharaniya   / 2025 ஜூலை 29 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்பு பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா செவ்வாய்கிழமை(29) அன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 

காலை 08.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.

 பிள்ளையார், முருகப்பெருமான், வள்ளி - தெய்வானை மூஷிகம், மயூரம், அன்னம் ஆகிய மூன்று தங்க வாகனங்களில் உள்வீதி உலா வந்து காட்சியளித்தனர்.

மகோற்சவம், தொடர்ந்து 25 நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

மகோற்சவத்தில், மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும்,மாம்பழ திருவிழா எதிர்வரும் 19ஆம் திகதியும் , சப்பரத் திருவிழா எதிர்வரும் 20ஆம் திகதியும், தேர்த் திருவிழா 21ஆம் திகதியும்  இடம்பெறவுள்ளன.

 தீர்த்த திருவிழா 22ஆம் திகதி காலை இடம்பெற்று , மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் நிறைவுபெறும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .