2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நானுஓயா விபத்து…

Editorial   / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா  ரதல்ல குறுக்கு வீதியில் வளைவுப்பகுதியில் இன்று அதிகாலை 01 மணியளவில் லொறியொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மஹியங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி மணல் எற்றிச் சென்று கொண்டிருந்த லொறியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளனரெனவும், சிறு சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளனரெனவும் நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு: எஸ்.கணேசன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X