Editorial / 2023 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

1990 ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களை நினைவு கூர்ந்து கறுப்புக்கொடி மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வினை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவனம் செலுத்தி அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை வெளிநாட்டில் உள்ள சில தரப்பினால் நியாயப்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் அக்கரப்பற்று , அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், ஒலுவில் ,சம்மாந்துறை , சாய்ந்தமருது ,கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ,உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு கறுப்புக்கொடிகள் ஏந்தியும் சுவரொட்டிகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்






32 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
53 minute ago
59 minute ago
1 hours ago