2025 ஜூலை 19, சனிக்கிழமை

நினைவு தினம்...

Editorial   / 2019 டிசெம்பர் 26 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரர் ஜோசப் பரராசசிங்கத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பில் நேற்று  (25) அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில்,  அம்முன்னணியின் தலைவர் லோ.திபாரகரன் தலைமையில் மட்டக்களப்பு, பல நோக்கு கூட்டுறவு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில், த.தே.கூ மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், ஞா.சிறீநேசன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிரசுக்கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான கே.துரைரஜசிங்கம் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரிய நேந்திரன், கே.கணகசபை, பொன் செல்வராசா உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின்  புகைப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றப்பட்டு, மௌனப்பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி, நத்தார் நள்ளிரவு ஆதாரனை இடம்பெற்ற வேளையில், மட்டக்களப்பு தேவாலயத்தில் ​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஜோசப் பரராசசிங்கம் உயிரிழந்தார்.

(படப்பிடப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X