2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நினைவேந்தல்…

Editorial   / 2019 ஜனவரி 02 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியன்று, திருகோணமலை கடற்கரையில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 13ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பால், திருகோணமலைக் கடற்கரையில் இன்று (02) மாலை நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கலாநிதி பி.ஞானேஸ்வரன் உட்பட இளைஞர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

மனோகரன் ரகிவர், யோகராஜ் ஹேமசந்திரன், லோகிதராஜா ரொஹான், தங்கவேல் சிவாநந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்களே கொல்லப்பட்டிருந்தனர்.

குறித்த மாணவர்களின் கொலைகள் தொடர்பில், விசேட அதிரடிப்படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 (படம்: அப்துல்சலாம் யாசீம்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X