2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நினைவேந்தல்…

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, அகில இலங்கை தமிழக் காங்கிரஸ்ஸின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 19ஆவது நினைவேந்தல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், வவுணதீவு, காஞ்சரம்குடா புளியடி சந்தியில் நேற்று முன்தினம் (05) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.  

கட்சியின் தீவிரச் செயற்பாட்டாளர் வினோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், கட்சியின் மாவட்டச் செயலாளர் க. ஜெகநீதன், நிர்வாகப் பொறுப்பாளர் சிவலிங்கம் சிவசுதன்  உட்பட பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்

இதன்போது, அமரர் குமார் பொன்னம்பலத்தில் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து தீபச்சூடர் எற்றப்பட்டதுடன், நினைவேந்தலில் கலந்துகொண்டவர்கள், மலர் தூபி, 2 நிமிடங்கள் அஞ்சலியும் செலுத்தினர்.

இதேவேளை, அம்பாறை, திருக்கோவில் பிரதேச சபையின் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் ஏற்பாட்டாளருமான நடராஜா விஜயராஜா தலைமையில், அமரர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல், தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு கழகத்தின் பொது அரங்கில், இளைஞர்களால் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(தகவலும் படமும்: கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.கார்த்திகேசு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X