2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பில் பஸ் தீக்கிரை

Janu   / 2023 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்தபஸ் வியாழக்கிழமை (24) அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீ விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வெளிநாடு செல்வதற்காக  35 பயணிகளை ஏற்றி வந்த என்.டி. 0321 இலக்கம் கொண்ட சொகுசு  பஸ்  ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

இதன் போது பஸ் முற்றாக எரிந்து உள்ளதுடன் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X