Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியிலுள்ள 500 பாடசாலைகளில் பொலிஸ் மாணவ சிப்பாய் படையணிக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளிலிருந்து தேசிய மாணவ சிப்பாய் படையணி முகாம்கள், ஒருங்கமைக்கப்பட்ட படையணி முகாம்கள் மற்றும் மாகாண மதிப்பீடு முகாம்கள் நடாத்தப்பட்டு அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 42 ஆண்கள் பிரிவுகளும் 21 பெண்கள் பிரிவுகளின் பங்கேற்புடன், களுத்துறை பொலிஸ் கல்லூரியின் அலுவிஹாரை விளையாட்டு மைதானத்தில் தேசிய மாணவ சிப்பாய் படையணிக்கிடையேயான பொலிஸ்மா அதிபர் வெற்றிக் கிண்ணமானது 04.10.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், அந் நிகழ்வின் விடுகை அணிவகுப்பு விழா 10.10.2025 அன்று நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இம்முறை பொலிஸ்மா அதிபர் வெற்றிக்கிண்ணத்தில் தேசிய முகாம் மாணவ சிப்பாய் படையணியிலிருந்து 1050 ஆண்களும் 525 பெண்கள் மற்றும் பொலிஸ் மாணவ சிப்பாய் படையணியில் 40 சிரேஷ்ட அதிகாரபூர்மற்ற உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இவ் விசேட இறுதி நகழ்வானது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்களின் தலையில் மற்றும் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் உட்பட அழைப்பை ஏற்று வருகைத்தரும் பிரமுகர்களின் பங்கேட்புடன், கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவ சிப்பாய்கள் நலன்விரும்பிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களின் பங்கேற்புடன் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் வரலாற்றை நோக்குவோமானால் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி கொழும்பு லொன்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள விஷேட பொலிஸ் உப சேவை தலைமையகத்தை மையமாகக் கொண்டு பொலிஸ் மாணவ சிப்பாய் படையணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அன்றிலிருந்து பொலிஸ் மாணவ படையணி வருடாந்த பயிற்சினூடாகநாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியாக பொலிஸ்மா அதிபர் வெற்றிக் கிண்ணம் தேசிய படையணி முகாம் நடாத்தப்படுகின்றது.
1985 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க மனிதவள பயன்பாடு மற்றும் துணைப்படைகள் சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தேசிய மாணவ சிப்பாய் படையணி ஸ்தாபிக்கப்பட்டு அச் சட்டத்தின் 45 வது பிரிவிற்கமைய சட்டம் ஆரம்பிக்கும் முந்தைய நாளில், இலங்கை இராணுவம் மாணவ சிப்பாய் படையணிக்கும், பொலிஸ் மாணவ சிப்பாய் படையணிக்கும் மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்து அனைவரையும் தேசிய மாணவ சிப்பாய் படையணியாக கருதப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.
இதன் நோக்கம் மாணவர் மத்தியில் நல்லொழுக்கம், ஆளுமை, தன்னம்பிக்கை போன்ற சிறந்த பண்புகளை கட்டியெழுப்பி சிறந்த தலைமைத்துவம் கொண்ட சிறந்த பிரஜைகளை உருவாக்குவது மாத்திரமின்றி சகல பொதுமக்களும் நாட்டில் பாதுகாப்புடன் வாழ்வதற்கான சூழலை உருக்கும் நோக்குடன் இலங்கை பொலிஸ் மாணவ படையணிப் பிரிவின் ஊடாக வருடாந்தம்ஏற்பாடு செய்யப்படுவதுடன், தேசிய மாணவ சிப்பாய் படையணிக்கிடையேயான பொலிஸ்மா அதிபர் வெற்றிக் கிண்ணம் நடாத்தப்படும். பொலிஸ் மாணவப் படையணிப் பிரவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது 10.10.2025 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு பாடசாலை மாணவத் தலைவர்கள்உட்பட 09 ஆம் தரத்திலிருந்து 13 ஆம் தரம் வரையிலான பாடசாலை மாணவர்களின் ஆளுமை மேம்பாடு மற்றும் தலைமைத்துவ பயிற்சி, முதலுதவி மற்றும் பாடசாலை சார்ந்த போதைப் பொருள் தடுப்பு திட்டங்கள் மாகாண ரீதியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை பொலிசினூடாக நடைமுறைப்படுத்தப்படும் பொலிஸ் மாணவ சிப்பாய் படையணி இயக்கத்திற்காக தங்கள் குழந்தைகளை இணைப்பதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தி சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமநிலையான ஆளுமையைக் கொண்ட குழந்தைகளின் தலைமுறையை நாட்டிற்கு வழங்குவதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் மாணவப் படையணிப் பிரிவானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அன்பான வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago