2025 ஒக்டோபர் 09, வியாழக்கிழமை

நயன்தாரா – கவின் இணையும் ‘ஹாய்’

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயன்தாரா – கவின் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் – நயன்தாரா நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடைபெறாமல் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.

தற்போது அனைத்து கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். இப்படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தில் புதிதாக இரண்டு தயாரிப்பாளர்கள் இணைந்திருக்கிறார்கள். தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இதில் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார்கள். தீபாவளி முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

மேலும், இயக்குநர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். லோகேஷ் கனகராஜிடம் பல படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

’ஹாய்’ குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன், “ முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்பg கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

இதுவரை 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X