2025 மே 15, வியாழக்கிழமை

பாகிஸ்தான் உதவி...

Editorial   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டக் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹ்மத் ஆகியோர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (21)சந்தித்தார்.

பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் 75 வென்டிலேட்டர்கள் மற்றும் 150 சி-பெப் (CPAP) சுவாச உதவி இயந்திரங்களை இலங்கையில் கொவிட் -19 தொற்றுநோய் பரவலை  கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக  வழங்கி வைத்தனர்.

இது கொவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் இலங்கை மக்களுக்கான, பாகிஸ்தானிய மக்களின் ஆதரவின் வெளிப்பாடாகும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .