2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாரதப் பிரதமர் பதிவியேற்றார்

Editorial   / 2019 மே 31 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 15ஆவது பிரதமராக தெரிவான, நரேந்திர மோடி, நேற்றிரவு (30) பதவியேற்றுக்கொண்டார்.  

 

இந்தியாவின் ராஷ்டரபதி பவனில்  இடம்பெற்ற இந்நிகழ்வில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2ஆவது முறையாக பிரதமர் ஆனார்.

அவரைத் தொடர்ந்து பிற அமைச்சர்கள் பதவியேற்றார்கள். இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், இலங்கையிலிருந்து சென்றிருந்தக் குழுவினர் பங்கேற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாகவும் அந்நாட்டு பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X