2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு

Freelancer   / 2023 ஜூலை 12 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ்

அரசாங்கத்தின் மூலம் 1600 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இரத்தினபுரி புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை (11) திறந்து வைத்தார்.

நான்கு மாடி கட்டிடத்தொகுதியை கொண்ட மேற்படி நீதி மன்ற கட்டிடத்தொகுதியில் இரண்டு உயர் நீதி மன்றங்கள், ஒரு சிவில் மேல்முறையிட்டு நீதி மன்றம், இரண்டு மாவட்ட நீதி மன்றங்கள், இரண்டு மாஜிஸ்திரேட் நீதி மன்றங்கள், ஒரு தொழில் நீதிமன்றம் மற்றும் நீதி மன்றத்திற்கு தேவையான சகல அலுவலகங்கள் உட்பட சகல வசதிகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, தலதா அத்துக்கோரல, அகில எல்லாவல, காமிணி வலேபொட, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய உட்பட நீதிபதிகள், சட்டத்தரணிகள், அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X