Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா
மூன்றம்ச கோரிக்கைகளை முன்வைத்து இருவேறு அமைப்புகள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு பேரணிகளை நடத்தின.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துதல், நிரந்தர மாதச் சம்பளம், சொந்தக்காணி மற்றும் வீட்டுரிமை ஆகிய மூன்றம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தலவாக்கலையில் ஆரம்பமான கவனயீர்ப்பு வாகன பேரணி, கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலியா நகரம் வரைச் சென்றது.
தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ. கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ தோழர் மோகன் சுப்பரமணியம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணியில், 11 தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்துக்கொண்டன.
இதேவேளை, மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து, செட்டெக் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நடைபவனி மற்றும் கையெழுத்து வேட்டை என்பன ஹட்டன் நகரில் நடைபெற்றன. இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago