Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் நீதிமன்றித்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்விளைஞன் தூக்கிட்டுக்கொண்டதாக கூறப்படும் இடத்தை, கம்பளை நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி சாந்தினி, இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நடராஜ் ரவிசந்திரனை, புஸ்ஸல்லாவை பொலிஸார் கடந்த 22 ஆம் திகதி கைதுசெய்தனர்.
இந்நிலையில், இவ்விளைஞன் மறுதினமான 23ஆம் திகதி புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையின்போது, இளைஞன் தூக்கிட்டுகொண்ட இடத்தை இன்று 30 ஆம் திகதி பார்வையிடுவதாக நீதவான் தெரிவித்திருந்தார். இந்நிலையிலே நீதவான், இன்று பொலிஸ் நிலையத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago