Editorial / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பு ஏற்பாடு செய்த பிரதான பொங்கல் விழா, கல்முனை பழைய பஸ் நிலைய முன்றலில் இன்று (15) நடைபெற்றது.
சூரிய பகவானுக்கும் உழவர்களுக்கும் நன்றிசெலுத்தும் முகமாக நடைபெற்ற இப்பொங்கல் விழாவில், இளைஞர்கள், பிரதான நகர் ஊடாக மாட்டு வண்டியில் ஊர்வலமாகச் சென்றனர்.
நிகழ்வில், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவான் ஜே. வெதசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பொங்கல் பானையில் புத்தரிசிட்டு, நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
இதில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
(படப்பிடிப்பு: ஏ.எல்.எம்.ஷினாஸ்)



2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago