Editorial / 2026 மே 05 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr. Mohamed Muizzu), இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவைக் குறிக்கும் வகையில் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் மரக்கன்று ஒன்றை திங்கட்கிழமை (04) அன்று பிற்பகல் நட்டார்.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்ஸுவை (Dr. Mohamed Muizzu), இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மிக உற்சாகமாக வரவேற்றதுடன், இரு நாடுகளினதும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் திரண்டிருந்த சிறுவர்கள், மாலைதீவு ஜனாதிபதிக்குத் தமது மரியாதையைச் செலுத்தினர்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலி பல்தசார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில் மாலைதீவு ஜனாதிபதிக்காக ஜனாதிபதியின் விசேட இரவு விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.




















36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago