Editorial / 2025 ஜூன் 27 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிறுவனங்கள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அறிந்துகொள்ளும் நோக்கில் இலங்கைக்கு கல்விசார் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 25.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தனர்.
ஆவணக் காப்பகங்கள் மற்றும் பதிவேடுகளைப் பேணுவது மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வது குறித்து அறிந்து கொள்வதே இந்தக் கல்விசார் விஜயத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த விடயங்கள் தொடர்பில் இலங்கைப் பாராளுமன்றம் பின்பற்றும் முறைகள் குறித்து இவர்கள் அறிந்துகொண்டனர்.
இந்தக் குழுவினர் இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதான நூலகர் சியாத் அஹமட் அவர்களுடன் கலந்துரையாடியதுடன், பாராளுமன்ற பதிவுகள் மற்றும் ஆவணங்களைப் பதிவுசெய்வது மற்றும் அவற்றைக் பாதுகாப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
இவர்கள் பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன், ஆவணக் காப்பகத்தையும் பார்வையிட்டனர்.









8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026