R.Tharaniya / 2025 நவம்பர் 20 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வெருகல் கலாச்சார மண்டபத்தில் புதன்கிழமை (19) அன்று இடம்பெற்றது.
இதன்போது மாவீரர் பெற்றோர் மேள தாளங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.அதன் பின்னர் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக தீபச் சுடர்கள் ஏற்றப்பட்டு ,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரான்ஸ் வாழ் தாயக உறவுகளின் அனுசரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கணேசபிள்ளை குகன், மாவட்ட நிர்வாகச் செயலாளர் சி.அகிலன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததோடு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










அ . அச்சுதன்
11 minute ago
19 minute ago
52 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
52 minute ago
6 hours ago