2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மீண்டும் கற்றல் செயற்பாடுகள்…

Editorial   / 2021 நவம்பர் 08 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் கொரோனாவால் கடந்த 6 மாதங்களாக முடப்பட்டிருந்த பாடசாலைகளின் சாதாரண தரம்- உயர் தர மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள், சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று (08) ஆரம்பமானது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள 5 கல்வி வலயங்களிலும் மாணவர்கள் முககவசம் அணிந்து, உடல் வெப்பநிலை பரிசேதிக்கப்பட்டடு, கைகழுவிய பின்பு பாடசாலை வளகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு புனித மீக்கல் கல்லூரி மற்றும் வின்சென் பெண்கள் தேசிய பாடசாலையிலும் அதிபர்களின் கண்கானிப்பின் கிழ், கற்றல் செயற்பாடுகள் இன்று  ஆரம்பிக்கப்பட்டன.

விசேட  பொலிஸ் பாதுகாப்பு கண்கானிப்பு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

(படங்கள் - கே.எல்ரி.யுதாஜித்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .