2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முதற் சந்திப்பு

Yuganthini   / 2017 ஜூலை 10 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

 

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ்க்கும் இடையிலான சந்திப்பு, அண்மையில் நடைபெற்றது.   

இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ், தனது பதவிக்காலம் முடிந்து செல்ல உள்ளநிலையிலேயே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.   

இதன்போது கருத்து தெரிவித்த ரொபட் நொஷ்,  அமெரிக்க நாடுகளில் இடம்பெறும் பயிற்சிகளில், எதிர்வரும் காலங்களில் கலந்துகொள்வது

தொடர்பாகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும், இராணுவ தளபதிக்குத் தெரிவித்தார்.  

கடந்த தினங்களில் எமது நாட்டுக்கு வருகை தந்த அமெரிக்க கெடெற் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவத்தினர் வழங்கிய ஒத்துழைப்புக்காக அவர் இதன்போது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் காலங்களில் அமெரிக்காவிலிருந்து பயிற்சிக்காக வரும் நபர்களுக்கு, இந்த ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.  

அமெரிக்க தூதரக ஆலோசகர், எமது நாட்டில் சேவையாற்றிய காலப் பகுதிகளில், பூரண ஒத்துழைப்புடன் ஆற்றிய சேவையை கெளரவிக்கும் முகமாக, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  

இராணுவத் தளபதி, தனது பதவி நியமனத்தின் பின்பு, முதற் தடவையாக சந்தித்த வெளிநாட்டு பிரதிநிதி லெப்டினன்ட் கேர்ணல் ரொபட் நொக்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X