2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முத்தமிழ் வித்தகரின் ஜனன தினம்

Princiya Dixci   / 2022 மே 03 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 130ஆவது ஜனன தின நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வு, சுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச் சிலை அமைந்துள்ள நீரூற்றுப் பூங்கா வளாகத்தில், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயர் க.சத்தியசீலன், சுவாமியின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகளால் "வெள்ளை நிற மல்லிகையோ" பாடல் பாடப்பட்டதுடன், அதிதிகளினால் நினைவுப்  பேருரைகளும் ஆற்றப்பட்டு, ஜனனதின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X