2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் (படங்கள்)

Editorial   / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த புதன்கிழமை(8) அதிகாலை முதல் எஒரு வாரத்துக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளமு.

இந்த நிலையில் குறித்த கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு குடும்பங்கள் இன்று (10) வெள்ளிக்கிழமை காலை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், குறித்த கிராமத்தில் உள்ள இரு விடுகளுக்கும் சென்று தனிமைப்படுத்தப்பட்ட குறித்த இரு வீடுகளிலும் உள்ள 08 உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டார்.

மேலும் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார துறை பணியாளர்களும் குறித்த வீடுகளுக்கு சென்றதோடு, கிருமி நீக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

மேலும் தாராபுரம் கிராமத்தை சுற்றி இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளை சேர்ந்த 464 குடும்பங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .