2025 மே 21, புதன்கிழமை

மூன்று வாகனங்கள் விபத்து

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் நேற்று (26) மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சிறியரக பிக்கப் வாகனம் காரில் மோதியதில் அக்காரைச் செலுத்திவந்த வைத்தியர் படுகாயமடைந்துள்ளார்.

கல்முனை, வடக்கு ஆதாரவைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர், பாண்டிருப்பில் அவரது வீட்டில் இருந்து வைத்தியசாலைக்குச் செல்வதற்காக பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய சந்தியில் பிரதான வீதியால் செல்வதற்காக வீதியோரமாக நின்றபோது, கல்முனை நோக்கி மிகவும் வேகமாக வந்துகொண்டிருந்த பிக்கப் வாகனம் சாரதியின் வேக் கட்டுப்பாட்டை மீறியதாலேயே, இவ் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியால் வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்திவந்த நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் வைத்தியரின் கார் கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. பிக்கப் வாகனம் செலுத்திவந்த சாரதி, கல்முனைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

(படங்கள்: எஸ்.சபேசன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம். ஹனீபா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .