2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

முன்மாதிரி...

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (24) பல்லாயிரக்கணக்கான வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணி நிகழ்வின் இறுதியில் அம் மைதானத்தில் நிறைந்திருந்த பிளாஸ்ரிக் மற்றும் கடதாசிக் குப்பைகளை மக்களே சேகரித்து அகற்றினர்.

நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய நிகழ்வில் கலந்துகொண்ட மக்களில் ஒரு பகுதியினர் குப்பைகளை சேகரித்து மைதானத்தின் ஒரு பகுதியில் ஒதுக்கியுள்ளனர்.

ஒவ்வொரு நிகழ்வுகளின் இறுதியிலும் ஒவ்வொரு மைதானத்திலும் பெருமளவான பிளாஸ்ரிக் மற்றும் கடதாசி குப்பைகள் நிறைந்து காணப்படுவதுடன், அவற்றை அப்புறப்படுத்தப் பல நாட்கள் செல்வதுடன், துப்பரவுத் தொழிலாளர்களும் பல சிரமங்களை எதிர்கொள்வது வழமை.

இவற்றுக்கு மத்தியில் இன்றைய இச்செயல் முன்மாதிரியாகக் காணப்பட்டது. (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X