Editorial / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் , நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 39 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 250இற்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 500இற்கும் மேற்பட்டவர்கள் அவயவங்களை இழந்து குடும்பத்தை இழந்தனர்.
அன்றைய தினம் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக நாட்டின் பல பாகங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன் , தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.
யாழ். மரியன்னை தேவாலயத்தில் காலை 8.45 மணியளவில் தேவாலய மணி ஒலிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் மெழுகுதிரி ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன. 




42 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago