R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல் இந்தியா மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் ஒரு தலைப்பட்ச நடவடிக்கைகளை நினைவூட்டும் வகையில் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் செவ்வாய்கிழமை (05) அன்று அனுஷ்டிக்கப்பட்டது.
முக்கியப் பேச்சாளர்கள் காஷ்மீரிகளின் அவல நிலையைப் சுட்டிக் காட்டியதோடு இந்த சர்ச்சையானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் உள்ள பழமையான விஷயங்களில் ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, இந்தியா தனது உறுதி மொழிகளை மதிக்க மறுப்பதாலும், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்காததாலும் இந்த சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.
மனிதாபிமான மற்ற இராணுவ முற்றுகை, தகவல் தொடர்பு முற்றுகை, சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், போலி என் கவுன்டர்கள் மூலம் அப்பாவி காஷ்மீரிகள் மீதான அடக்கு முறை மற்றும் மிருகத்தனமான தாக்குதலை உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) ஃபஹீம்உல்அஸீஸ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
மேலும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலிசர்தாரி, பிரதமர் முகமது ஷேபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் இஷாக்தர் ஆகியோரின் இந்நாள் குறித்த செய்திகளும் வாசிக்கப்பட்டன.





5 minute ago
12 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
15 minute ago
19 minute ago