Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை இன்றைய தினம் (09) வியாழக்கிழமை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக , சென். பொஸ்கோ பாடசாலை அருகில் புனரமைக்கப்பட்டு வரும் குளத்தினையும் , ஐ திட்ட வீதியையும், ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டத்தையும்,யாழ்.மாநகர சபை புதிய கட்டடத்தையும் பார்வையிட்டார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திj; திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்தது.
இதன் போது யாழ்மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் ,யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன்,யாழ்ப்பாண பிரதேச செயலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் பாசையூரில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நல்லூர் கலைமகள் விளையாட்டு மைதானம்,பல்பரிமாண நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உள்ள மருதனார்மடம், மத்திய கல்வி அமைச்சின் கீழ் இடம்பெற்று வருகின்ற தெல்லிப்பளை அருணோதயா பாடசாலைக் கட்டடம், வறுத்தலைவிளானில் காணியற்ற குடும்பங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தி திட்டங்கள், நாவற்குழியில் யாழ்ப்பாண - கிளிநொச்சி நீர் விநியோக திட்டத்தையும் பார்வையிடவுள்ளார். (படங்களும் தகவலும்: எம்.றொசாந்த், டி.விஜித்தா )
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
53 minute ago